நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

images 2 3

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதியில் நிலம் வழங்கப்படாது என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி அதிரடியாக அறிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நடைபெற்றபோது, நல்லூர் மேற்கு வீதியில் உள்ள காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

குறித்த இடத்தில் யார் நினைவேந்தலை நடத்துவது என்பதில், சைக்கிள் கட்சிக்கும் மான் கட்சிக்கும் இடையே கடும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது.

சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை கிடையாது என்றும், இது அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு என்றும் மான் கட்சியினர் வலியுறுத்தினர். மேலும், வருடா வருடம் சைக்கிள் கட்சியினரே அடாத்தாக முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டி, இம்முறை குறித்த காணியைத் தமக்குக் குத்தகைக்குக் கோரியுள்ளனர்.

ஆனால், சைக்கிள் தரப்பினர் அதனை ஏற்க இயலாதவர்களாகக் குழப்பங்களை உருவாக்கி வருவதாகவும் விவாதிக்கப்பட்டது.

ஒற்றுமை இன்மையால் இரு பிரிவாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவது கீழ்த்தரமான நிகழ்வு எனக் குறிப்பிட்ட முதல்வர், சபை ஏற்கனவே இரு தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து முடிவைத் தெரிவிக்குமாறு கோரியிருந்தது.

ஆனால், குறித்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் எந்தவொரு பதிவையும் சபையுடன் முன்னெடுக்கவில்லை.

இதன் அடிப்படையில், குறித்த விவாதத்தைப் புறக்கணித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) புறக்கணித்திருந்த நிலையில், காணியை இரு தரப்புக்கும் வழங்குவதில்லை என்று சபை தீர்மானித்தது. மேலும், பொது இணக்கப்பாட்டுடன் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த முன்வந்தால், அதற்கு இடம் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் மதிவதனி தெரிவித்தார்.

Exit mobile version