தமது கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில், முத்துநகர் விவசாயிகள் இன்று (நவம்பர் 20, 2025) தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துநகர் கிராமத்தில் பல வருடங்களாகத் தாம் மூன்று போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயக் காணிகளும், குளங்களும் காணப்படுகின்றன. ஆனால், அவை இந்திய சூரியபடலத் (Solar Panel) திட்டத்தின் கீழாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்துத் தரப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ரொசான் அக்மீமன ஆகியோர் தம்மை ஏமாற்றியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண் ஹேமச்சந்திர மற்றும் ரொசான் அக்மீமன ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.