வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Shooting Weligama PS Lasantha Wickramasekara

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) கொலைச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) இன்று (26.10.2025) கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைதுகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (25.10.2025) தென் மாகாணம் முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version