கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க (Rangajeewa Jayasinghe ) கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இவர் ஏற்க்கெனவே கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தருந்தார். எனினும் மீண்டும் இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் 55 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார் .
மேலும் இலங்கைப்பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.