archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

Share

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உரையாற்றுகையில், தனது தந்தை காணாமல் போனமை தொடர்பில் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகள் காலத்தில் காவல்துறையில் பணியாற்றிய தனது தந்தை காணாமல் போனது குறித்து அவர் வேதனையுடன் பேசினார்.

“சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு அளித்தும், சாட்சியமளித்தும் எந்தப் பலனும் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.

“அவருக்கு என்ன நடந்தது என்று இன்று என்னால் அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது,” என்று உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்ட அவர், சிங்களம் பேசக் கற்றுக்கொடுத்தது தன் தந்தைதான் என்று நினைவு கூர்ந்தார்.

சுகாதார முறைமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அர்ச்சுனா, மருத்துவமனை குறைபாடுகளை அம்பலப்படுத்தியதற்காகத் தான் எதிர்கொண்ட சவால்களையும் சுட்டிக்காட்டினார்:

சேவை செய்ய முற்பட்டதற்காகவும், வைத்தியசாலைக் குறைபாடுகளை அம்பலப்படுத்தியதற்காகவும் தான் கைது செய்யப்பட்டுச் சிறையிலிடப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

மன்னார் வைத்தியசாலையில் இரவில் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறிக் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவது என்பது பெயர்ப்பலகைகளை மாற்றுவதால் நடக்காது என்றும், அதற்கு மேலதிகமாக மருத்துவர்கள், தாதிகள் போன்ற மனிதவளத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...

16 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: காரில் தப்பியோடிய கும்பலுக்கு வலைவீச்சு!

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்புச் சாவடிக்கு அருகாமையில் இன்று (மார்ச்...