நெடுஞ்சாலையில் கொட்டிய பண மழை – குதூகலத்தில் சாரதிகள்

usa 3

usa

நெடுஞ்சாலை ஒன்றில் வாகனமென்றிலிருந்து கொட்டிய பணத்தை குதூகலத்தில் சாரதிகள் அள்ளி சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று பயணித்த வேளை, அந்த பாரவூர்தியின் கதவுகள் திடீரென திறந்ததால் அவ்வாகனத்தில் இருந்த பணம் வீதியில் கொட்டியுள்ளது.

அவ் வீதியால் சென்ற வாகன சரதிகள் அப் பணத்தை எடுத்து சென்றுள்ளார்கள்.

இதை அறிந்த தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை எடுத்தவர்களிடம்  அப் பணத்தை திருப்பி அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அதில் பலர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர் .

சிலர் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

பணத்தை எடுத்தவர்களின் வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

பணத்தை எடுத்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்தோடு அவர்கள் கைது செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செயப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#world

 

Exit mobile version