ஜனநாயக நாட்டில் வாரிசு அரசியல் ஏற்புடையது அல்ல. பா.ஜனதா கட்சியின் கொள்கைகள் வாரிசு அரசியலுக்கு எதிரானது.
அதனால்தான் பா.ஜனதாவில் எம்.பி.க்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.இவ்வாறு இந்தியாவின் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லியில் இன்று காலை பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், உக்ரைனில் பலியான மாணவர் நவீன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போதே மோடி குறித்த கருத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
பா.ஜனதாவின் இந்த கொள்கையால் 5 மாநில தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. இதை உணர்ந்து மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.
ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் மிக மிக ஆபத்தானது. நாம் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். பா.ஜ.க. எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் தீவிரமாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் வெளியான “தி காஷ்மீர் பைல்ஸ்” படம் சிறப்பாக உள்ளது. அத்தகைய படங்கள் நிறைய வெளி வரவேண்டும்.என்றார்.
#IndiaNews