ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்: 16 மில்லியன் ரூபா நிதி முறைகேடு வழக்கு மார்ச் மாதம் முதல் விசாரணை!

DV636XCGKP642TWFS7MMEAA6K4

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, வரும் மார்ச் மாதம் முதல் விசேட முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்தார்.

தனிப்பட்ட விஜயமான இந்தப் பட்டமளிப்பு விழாவிற்குச் செல்வதற்காக, சுமார் 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பொதுப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது ரணில் விக்ரமசிங்க பால்கனியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை – 29) விசாரணைக்கு வந்தது. இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், வரும் 2026 மார்ச் மாதம் முதல் இந்த வழக்கை ‘டியர்-அட்-பார்’ (Day-at-Bar) முறையில், அதாவது தொடர்ச்சியான தினசரி விசாரணையாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

அரச தலைவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பொதுப்பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பான இந்த வழக்கு, நாட்டின் சட்ட மற்றும் அரசியல் தளங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றது.

 

 

Exit mobile version