3000 1647134693
செய்திகள்உலகம்

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்!!

Share

வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவி‌ஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது.

பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...