இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் ஊடாக 2025 ஆம் ஆண்டில் சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தரவுகள்.
வெளிநாட்டு பணவனுப்பல்கள் (Remittances): புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் ஊடாக 7 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க சர்வதேச உதவிகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்:
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை சுமார் 85 பில்லியன் ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.
இந்த வருமான உயர்வு மற்றும் நன்கொடைகள் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய வலுசேர்த்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.

