மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும் கமெண்ட் (Comment) பட்டன்களை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை அதன் கருவிகளை எளிமைப்படுத்தவும் நவீனமயமாக்கவும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
2026 பெப்ரவரி 10, அமலுக்கு வரும் இருப்பினும், இந்த மாற்றம் பேஸ்புக்கின் சொந்தத் தளத்தில் உள்ள லைக் பட்டனைப் பாதிக்காது. பயனர்கள் தங்கள் கணக்குகளில் வழக்கம்போல பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லைக் செய்ய முடியும்.
2026இல் இந்த மாற்றம் அமலுக்கு வந்த பிறகு, இந்த பட்டன்கள் எந்த வலைத்தளத்தையும் உடைக்காது என்று மெட்டா தெளிவுபடுத்தியுள்ளது. அவை தோன்றுவதை நிறுத்தி, எந்தப் பிழைகள் அல்லது இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் 0x0 பிக்சலாக (கண்ணுக்குத் தெரியாதது) ரெண்டரிங் செய்யும்.
டெவலப்பர்கள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றாலும், சிக்கலில்லாத அனுபவத்திற்காகப் பழைய Plugin குறியீட்டை அகற்ற மெட்டா பரிந்துரைக்கிறது.

