images 3 1
செய்திகள்இலங்கை

மோசடிகளைத் தடுக்க ‘மெட்டா’வின் புதிய பாதுகாப்பு அம்சங்கள்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ஏ.ஐ. எச்சரிக்கை அறிமுகம்!

Share

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்கும் நோக்கில், ‘மெட்டா’ (Meta) நிறுவனம் தங்கள் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) மற்றும் ‘பேஸ்புக்’ (Facebook) தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகுதிநேர வேலை வாய்ப்புகள், சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள், ‘டிஜிட்டல்’ கைது போன்ற பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இந்த மோசடிகள் பெரும்பாலும் ‘வாட்ஸ்அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ தளங்கள் மூலம் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெசஞ்சர்: ‘பேஸ்புக் மெசஞ்சரில்’ செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மோசடியைக் கண்டறியும் அமைப்பு அறிமுகமாக உள்ளது. இந்தக் குறித்த அமைப்பு, புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் தொடர்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்: ‘வாட்ஸ்அப்பில்’ அறிமுகம் இல்லாத நபர்களுடன் காணொளி உரையாடலில் ஈடுபடும் போது, தொலைபேசித் திரையைப் பகிரும் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி காட்டப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இது இணைய மோசடி கும்பல் வங்கி விபரங்கள் அல்லது ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் கடவுச்சொல் எண்களைத் திருடப் பயன்படுத்தும் பொதுவான வழிமுறையாகும்.

இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள், பயனர்களை நிதி மோசடிகளில் இருந்து பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...