பாம்பின் விஷசத்தில் கொரோனாவுக்கு மருந்து!!

Tamil News large 2835737

பாம்பின் விஷசத்தில் கொரோனாவுக்கு மருந்து!!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில், ஜாரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவதை, பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள், ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கொரோனாத் தொற்று பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, ஜரரகுசு பிட் வைபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரஸில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால், ஜரரகுசு பிட் வைபர் பாம்புகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version