மாவனெல்லை கோர விபத்து: லொறியின் பிரேக் செயலிழந்ததே காரணம்! நேரடி சாட்சியம்.

images 20

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை, பல்பாத பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து குறித்த மேலதிக மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விபரங்கள் வெளியாகியுள்ளன.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பிரேக் (Brake failure) திடீரென செயலிழந்துள்ளது. இதனால் உதுவன்கந்தை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லொறி, அதிவேகத்தில் முன்னால் சென்ற வாகனங்களை மோதித் தள்ளியுள்ளது:

முதலில், பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தின் பின்புறத்தில் லொறி மோதியது.

மோதிய வேகத்தில் இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் சென்ற தனியார் பேருந்தை மோதிவிட்டு ஒரு மதகில் மோதி நின்றது.

லொறி மற்றும் இ.போ.ச பேருந்து மோதிய வேகத்தில் தள்ளப்பட்ட தனியார் பேருந்து, அருகில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் உதவியாளர் (Assistant) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லொறியில் பயணித்த மற்றொரு நபர் மற்றும் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துக்குள் சுமார் 60 பயணிகள் இருந்தனர். முன்னால் சென்ற பேருந்துக்காக நான் வேகத்தைக் குறைத்தேன். அந்தச் சமயம் ‘தடார்’ எனப் பலத்த சத்தம். ஏதோ ஒன்று ஜெட் விமானம் போல எல்லாவற்றையும் தள்ளிக்கொண்டு சென்றது. என்ன நடந்தது என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version