images 5 2
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் 24 மணி நேரப் பணிப் புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

Share

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவுப் புத்தகத்தைப் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த அநீதியான முடிவு தாதியர் சேவையின் கௌரவத்திற்கும் மற்றும் தனித்துவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்பதை கருத்தில் கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (நவம்பர் 12) காலை 7 மணி தொடக்கம் நாளை (நவம்பர் 13) காலை 7 மணி வரை 24 மணி நேரப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்திய சேவைகள் இடம்பெற்ற போதும், தாதிய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்படும் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...