02 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு சின்னப்புல்லுமலை பகுதியில் காட்டு யானை தாக்குதல்: 59 வயதுடைய நபர் உயிரிழப்பு!

Share

மட்டக்களப்பு – செங்கலடி, சின்னப்புல்லுமலை கிராமத்தில் நேற்று (மார்ச் 7) இரவு காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், தான் தங்கி வேலை செய்துவந்த தோட்டத்திலுள்ள தங்குமிடம் (வாடி) மீது காட்டு யானை தாக்குதல் நடத்திய போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் குறித்த தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த தங்குமிடத்தை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற குறித்த நபரைத் துரத்திச் சென்ற யானை, அவரைத் தாக்கியுள்ளதுடன், அவர் நிலத்தில் விழுந்தபோது மிதித்தும் கொன்றுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பின்னர், மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். நசீர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார். இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...