kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

Share

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே இவ்வாறு மூன்று லட்சம் பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளது.
உனவட்டுன சுற்றுலாப் காவல் பிரிவின் அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...