50 கால் போத்தல் சாராயத்துடன் முள்ளி சந்தியில் ஒருவர் கைது!

WhatsApp Image 2022 03 05 at 10.51.33 PM

இன்று (05) நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி சந்தியில் வைத்து 50 கால் சாராய போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி உதயானந்தன் அவர்களது தலைமையில் கீழ் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களது குழுவினரால் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வரணியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், நீண்ட காலமாக தான் இவ்வாறு சாராயம் விற்பனை செய்வதாக வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

#SrilankaNews

 

 

Exit mobile version