பல வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காலி நெலுவ பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வருகின்றது.
பணிக்காக உகண்டா சென்றிருந்த இவர் தற்போதே நாடு திரும்பியுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்படாததால் 2016 ஆம் ஆண்டு இலங்கை மலேரியா நோயற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவிக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment