கடுவளை – ரனால (Ranala) பிரதேசத்தில் உள்ள ஓர் அட்டைப் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று புதன்கிழமை (நவ 19) அதிகாலை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

