யாழில் சேலைத்திருடனும் உருவாகினான்!!

thief 4 092713

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர்.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள தமது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

குறித்த வீட்டு உரிமையாளர்களும், சுவிஸ் குடும்பத்தாரும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். இதன்போது, பெறுமதியான தங்க நகைகள், சேலைகளை அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

மாலையில் வீடு திரும்பிளதும் அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

#SrilankaNews

 

Exit mobile version