இன்று காலை கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் கன்டர் வாகனத்துடன் தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த கன்டர் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தை கட்டி இழுத்து வரும் நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த சொகுசு பேருந்து கன்டர் வாகனத்தில் மோதியுள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை ஆயினும் பேருந்தும் கன்டர் வாகனமும் சேதத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தால் சில மணிநேரம் ஏ-9 வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews