பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

images 1 2

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில், அவரது இல்லத்திற்கு முன்பாக இந்தக் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.

இந்தக் கொண்டாட்டத்தில் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கலந்துகொண்டார்.

எம்.கே. சிவாஜிலிங்கம் கேக்கை வெட்டி வைத்தார். பிறந்தநாளில் கலந்துகொண்டவர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

Exit mobile version