திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 96ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியும் கனரக டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக பனிமூட்டம் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews