இலங்கையில் முதலிட்டால் நீண்டகால விசா!!

Srilanka Visa e1524209109753

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Exit mobile version