தெஹிவளை, பின்னவல மிருகக்காட்சிசாலைகளுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது 110 ரூபாவாக காணப்படும் நுழைவுக்கட்டணத்தை 200 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ரிதியகம மிருகக் காட்சிசாலைக்கான நுழைவு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெரியவர்களுக்கான கட்டணம் 350 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 120 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக அதிகரித்துள்ளது..
#SrilankaNews
Leave a comment