தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.
இன்றைய தினம் பாராளுமன்ற விசேட உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை இதுவரை காலமும் பாராளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ முன்வைக்கப்படவில்லை.
இது நாட்டின் எரிசக்தி துறையையும் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.
இவ் ஒப்பந்தம் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இவ் ஒப்பந்தம் NFC Sri Lanka Power Holdings என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் தான் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
#SriLankaNews
Leave a comment