முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா பொதியை கொண்டு சென்ற நபர் புல்மோட்டை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் முல்லைத்தீவு பகுதியிலிருந்து திருகோணமலைக்கு ஒரு கிலோவும் 800 மில்லி கிராம் கஞ்சா பொதியை பயணிகள் பஸ்ஸில் கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருகோணமலை நீதிவான் இன்று (15) சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
#SriLankaNews