rtjy 270 scaled
இலங்கைசெய்திகள்

பெண் ஒருவரை கடத்திய 2 பெண்கள்

Share

பெண் ஒருவரை கடத்திய 2 பெண்கள்

மாரவில கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த பிரித்திகா சாந்தனி என்ற பெண்ணை கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 2 பெண்களால் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் பணம் பெற்ற இரண்டு பெண்கள் தன்னை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.

அதற்கமைய, கடத்தப்பட்டவர்கள் தன்னிடம் பணத்தைக் கோருவதால், கடத்தப்பட்ட பெண், பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை மீட்க வருமாறு கணவரிடம் கூறியுள்ளார்.

கணவர் மாரவில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பெண்ணை கண்டுபிடிக்க மாரவில பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், பெண்ணைக் கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கொச்சிக்கடை தலுவகொடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயது மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சம்பந்தப்பட்ட இருவரிடமும் 12 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்ட இரு பெண்களும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட பெண் உடல் நலக்குறைவு காரணமாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் நால்வரைக் கண்டறியும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....