தலைமுடியை தயார் செய்த இளம் பெண் மரணம்

tamilni 224

தலைமுடியை தயார் செய்த இளம் பெண் மரணம்

கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே என்ற 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேசிய பயிலுனர் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபையில் முகாமைத்துவ உதவியாளராக சிறிது காலம் பணியாற்றிய பாஷினி, குழந்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

அவர் மூன்று வயது மகளின் தாய் எனவும் எதிர்பாராத நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

 

 

Exit mobile version