tamilnid 32 scaled
இலங்கைசெய்திகள்

ரயிலில் பாய முயற்சித்த இளம் தாயை காப்பாற்றிய பொலிஸார்

Share

காலி அஹுங்கல்ல ரயிலில் குதிக்க முயற்சித்த 2 பிள்ளைகளின் தாயை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல உப முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

முறைகேடான கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது 8 மாத மகளை தூக்கிக்கொண்டு வந்த தாய் இந்த விபரீத முடிவை எடுக்க முயற்சித்துள்ளார்.

அஹுங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் தவறான உறவை பேணி வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வெளிநாட்டிலுள்ள கணவனுக்கு அனுப்பப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

சுமார் 4 லட்சத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் தன்னிடம் 60000 ரூபாவை கேட்டதாகவும் அதனை கொடுக்க முடியாத நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் 8 மாதக் குழந்தையுடன் ரயிலில் குதிக்க முயற்சித்ததாக பெண் குறிப்பிட்டுள்ளார்.

முறைசாரா உறவைப் பேணி அவருடன் அறையில் கழித்த தருணங்களை பதிவு செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...