வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (27) போட்டிகளில் வடமராட்சி யங்லயன்ஸ், அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
முதலாவது போட்டியில் வடமராட்சி யங்லயன்ஸ் வி.கழத்தை எதிர்த்து மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.கழகம் மோதியது. இரண்டு அணிகளும் அதிரடியாக ஆடிய நிலையில் யங்லயன்ஸ் 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன் வி.கழத்தை எதிர்த்து உரும்பிராய் சென்.மைக்கல் வி.கழகம் மோதியது. அதிரடி காட்டிய யூனியன் வி.கழகம் 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
#Srilankanews
Leave a comment