தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மரணம்
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மரணம்

Share

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மரணம்

கந்தளாய் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக பாதங்கள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 7 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் இருவரும் இதே போன்று வாகன விபத்துக்குள்ளாகி சில வருடங்களுக்கு முன்னர் கால்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...