தீ விபத்தில் சிக்கி இளம் தம்பதியினர் மரணம்!
கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29, 27 வயதுடைய தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.
அத்தனகல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இருவரும் அந்தப் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட கணவன் அங்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.