வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு

19 4

வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு

வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதியில் 30 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் சந்தையில் செவ்விளநீர் விலை சடுதியாக அதிகரித்திருந்தது.

நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக இளநீர் தேவை அதிகரித்திருந்த நிலையில் இதன் காரணமாக செவ்விளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்திருந்தது.

Exit mobile version