கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன் – சினிமா பாணியில் கொடூரம்
கொழும்பில் இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.
காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக கும்பல் ஒன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வெசாக் தோரணத்தை பார்வையிடுவதற்காக நண்பர்களுடன் ஒருகுடவத்தை நோக்கி சென்ற வேளையில் இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புவர்கள் என்ற சந்தேகத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.