8 47
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி

Share

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டடம் ஒன்றிற்குள் இருந்து விரல்களைக் கொண்டு அமைதிச் சின்னத்தைக் காண்பிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த சந்திப்பிலோ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்தோ அல்லது யார் இந்த புகைப்படத்தை எடுத்தார்கள் என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த புகைப்படம் தொடர்பில் ஆராய்ந்து ஊடகங்களுக்கு அறிவிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பின்னர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யோஷித, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானையில் காணி ஒன்றுடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பில் ராஜபக்ச சனிக்கிழமை பெலியத்தவில் கைது செய்யப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு 5ம் இலக்க நிதிச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித மீது குற்றம் சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பது உறுதியானதை அடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...