கூட்டணி மூலம் தேர்தலை சந்திப்போம்: சம்பிக ரணவக
எதிர்வரும் தேர்தல்களை பரந்துபட்ட கூட்டணியொன்றின் ஊடாக சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
பெந்தர பிரதேசத்தில் நேற்று(27.01.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம். அதற்காக எதிர்காலத்தில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
எங்களது கூட்டணி மூலமாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருத்தமான செயற்திட்டங்களை வகுத்துக் கொள்ள உத்தேசித்துள்ளோம்.
அதனை பொதுமக்கள் முன் சமர்ப்பித்து அதற்கான மக்கள் ஆணையை தேர்தல்களில் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம்.
எங்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் அது குறித்து நிச்சயம் அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.