இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா

9

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் (Yala National Park) பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக, யால தேசிய பூங்காவில் உள்ள பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பூங்காவிற்குள் உள்ள பல ஏரி கரைகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மழை பெய்யும் சூழ்நிலை குறையும் வரை, யால தேசிய பூங்காவை இன்று (01) முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, யால மண்டலம் 1 இன் கட்டகமுவ மற்றும் பலடுபன நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவால் பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version