24 6616386689279
இலங்கைசெய்திகள்

உலகின் முதலாவது கறுவாப்பட்டை அருங்காட்சியகம்

Share

உலகின் முதலாவது கறுவாப்பட்டை அருங்காட்சியகம்

உலகின் முதலாவது கறுவாப்பட்டை அருங்காட்சியகம் அண்மையில் மிரிஸ்ஸாவின் ஹென்வாலேயில் உள்ள மிரிஸ்ஸா ஹில்ஸ் தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது, இது கருவாப்பட்டையின் வரலாறு, உற்பத்தி மற்றும் குறியீட்டுத்தன்மையில் ஒரு ஆழமான பயணத்தை காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகமானது கடந்த ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதியன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மிரிஸ்ஸ ஹில்ஸ் மைல்ஸ் யங் ஆகியோர் முன்னிலையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பண்டைய கால எகிப்திய எம்பாமிங் சடங்குகள் தொட்டு மருத்துவத்தில் அதன் நவீன கால பயன்பாடுகள் வரை, இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு கறுவாப்பட்டையின் தோற்றத்தை ஆராய ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக கூறப்படுகிறது.

புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் சி. அஞ்சேலந்திரனால் வடிவமைக்கப்பட்ட மிரிஸ்ஸ ஹில்ஸ் தோட்டத்தின் இயற்கை அழகுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் ஒரு முழுமையான பார்வையாளர் மையமாக செயற்படுவதாக கூறப்படுகிறது.

பசுமையான இந்த கறுவாப்பட்டை சூழ்ந்த இடத்திலே கருவாப்பட்டையை உரித்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் மற்றும் செயல்விளக்கங்களை இந்த அருங்காட்சியகம் வழங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த அருங்காட்சியகம் தொடர்பாக மைல்ஸ் யங் கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையான கறுவாப்பட்டை மற்றும் அதன் மாற்றீடுகளுக்கு இடையிலான வேறுபாட்டை மக்களுக்கு காண்பிப்பது மட்டுமல்லாமல், அதன் சிறப்புக்களையும் காண்பிக்க இந்த அருகாட்சியகம் தலைப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத்துறையினால் கறுவாப்பட்டை குறைவாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் இந்த அருங்காட்சியகம், பல பார்வையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளது.

ஏனென்றால் உண்மையான கறுவாப்பட்டை மற்றும் தரமற்ற மாற்றுகளுக்கு இடையிலான வேறுபாட்டை நாங்கள் வெளிப்படுத்துவோம், அதனையும் தாண்டி கருவாப்பட்டையின் புராதன வரலாற்றையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

மேலும், வர்த்தகத்தில் பணிபுரியும் மற்றும் இலங்கையின் விவசாய பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் அனைவருக்கும் இந்த அருகாட்சியகத்தை சமர்ப்பிக்கிறோம்.” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...