தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது தற்போது 1909.25 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2007.66 டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் (30.06.2023) கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment