இலங்கைசெய்திகள்

ஒரே நாளில் விமான பயணத்தை இரத்து செய்த 68000 பேர்

Share
18
Share

ஒரே நாளில் விமான பயணத்தை இரத்து செய்த 68000 பேர்

ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய ஜெஜு விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த சுமார் 68 ஆயிரம் பேர் தங்களது பயணங்களை இரத்து செய்துள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

இதில் 33 ஆயிரம் பேர் உள்ளூர் பயணங்களையும், 34 ஆயிரம் பேர் வெளிநாட்டு பயணங்களையும் இரத்து செய்துள்ளனர் என ஜெஜு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் (South Korea) ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 179க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

‘ஜேஜூ ஏர்’ விமானம், தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து வெளியேறி சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

தாய்லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் 181 பேர் இருந்தனர். அவர்களில் 179 பேர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் இரண்டு பணியாளர்கள் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், பறவைகள் விமானம் மீது மோதியிருக்கலாம் அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இந்த விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...