வெளிநாடு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்கள்

tamilnic 7

வெளிநாடு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்கள்

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பலரை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா – எல, கொஸ்பலான பிரதேசங்களை சேர்ந்த 38 மற்றும் 64 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி 83 இலட்சம் ரூபாவும் அதிக பணத்தை மோசடி செய்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version