கொழும்பில் சூட்சுமமான முறையில் பெருந்தொகை பணத்தை திருடிய பெண்

17 21

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் காசாளராகப் பணிபுரிந்த பெண், அந்த நிறுவனத்தின் பெட்டகத்திலிருந்து சுமார் 2.5 மில்லியன் ரூபாவை திருடியுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

குறித்த சந்தேக நபரான பெண் தற்போது அங்கிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசாளராக பணிபுரியும் போது, ​​அந்த பெண் தனது ஒரு கையில் வைத்திருந்த கைக்குட்டையை பயன்படுத்தி நுட்பமான முறையில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவிலும் பெண்ணின் மோசடி பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version