3 பிள்ளைகளின் தாய் கொடூரமாக படுகொலை

17 2

கதிர்காமம், பேரகிரிகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது கணவனை பிரிந்து பேரகிரிகமவில் வேறொரு ஆணுடன் வசித்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் பதிவாகி உள்ளது.

உயிரிழந்த பெண் தனது முறையற்ற கணவருடன் அடிக்கடி வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமரா அமைப்பைக் கூட கொலையாளி அகற்றி எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version