tamilnid 4 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது

Share

யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.

இதன்போது கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை, பிரதான நுழைவாயிலில் சோதனையிட்ட போதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண் என தெரியவந்துள்ளது .

இவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...