சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

8 6

சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண்ணொருவர், இடைவழியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஹட்டன், நல்லதண்ணி அருகே நேற்று (4) மாலை நடைபெற்றுள்ளது.

நல்லதண்ணி அருகே உள்ள பாலமொன்றில் இருந்து பாய்ந்து குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆனால் உயிரிழப்பிற்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவரவில்லை.

உயிரிழந்தவரின் சடலம் தற்போதைக்கு மஸ்கெலியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version