சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை பெண்
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்திருந்தார்.
பிரான்சிஸ்காவின் இந்த தேர்தல் வெற்றியானது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.பிரான்ஸிஸ்காவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
இலங்கையில் பிறந்த ரூமி ஆறு வயதாக இருக்கும்போது 1998ஆம் ஆண்டு பெற்றோருடன் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.