rtjy 131 scaled
இலங்கைசெய்திகள்

அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் வழக்கு தாக்கல்

Share

அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் வழக்கு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்களை சனல் 4 ஆவணப்பதிவு ஊடாக வெளிப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டிற்கமைய நேற்று (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அசாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்து பின்னர் மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடாத்திய நிலையில் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி உள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் குற்றச்சாட்டினை முன்வைத்து தற்போது அசாத் மௌலானாவின் வெளிநாட்டு தஞ்சம், நாடு கடத்தப்படுதல் என்பன மறுக்கப்பட்டு இவ்வழக்கினை மேலும் வலுவாக்குவதற்கு மூன்றாம் தரப்பொன்று முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
image 37812857b2
இலங்கைசெய்திகள்

வாகன விலைகள் ராக்கெட் வேகத்தில் உயரும்: 15% வரி தள்ளுபடி நீக்கப்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதி விலைகள் வரம்புகளைத் தாண்டி அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்...

images 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நவம்பர் 17 அன்று அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று (ஒக்டோபர் 27)...

19sex 17509
செய்திகள்இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: 9 மாதங்களில் 7,677 முறைப்பாடுகள் – பாலியல் அத்துமீறல்கள் 414 ஆக பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக 414...

b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...