அரசியல்வாதியின் மகனால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: நீதிமன்றம் உத்தரவு

tamilni 31

அரசியல்வாதியின் மகனால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரின் இரு வீடுகளில் விரிவான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான இந்த பெண் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து ஜமால்தீனுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version